தினேஸ் சாப்டரின் உயிரிழப்பு தொடர்பில் தகவல் வெளியிட்ட பொலிஸ் பேச்சாளர் நிகால் தல்டுவ!

#SriLanka #Crime #Police #Death
Mayoorikka
2 years ago
 தினேஸ் சாப்டரின் உயிரிழப்பு தொடர்பில் தகவல் வெளியிட்ட பொலிஸ் பேச்சாளர் நிகால் தல்டுவ!

தினேஸ் சாப்டர் உயிரிழப்பிற்கான காரணத்தை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் இன்னமும் தொடர்கின்றன பொலிஸ் பேச்சாளர் நிகால் தல்டுவ தெரிவித்துள்ளார்.
 
ஸ்காப்டரின் மரணம் தொடர்பில் இதுவரை 175 பேரின் வாக்குமூலத்தை  பதிவு செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஸ்காப்டர் தற்கொலை செய்துகொண்டார் என சில தகவல்கள் வெளியாகியுள்ளமை குறித்து கருத்து தெரிவித்துள்ள பொலிஸ்பேச்சாளர் பொலிஸார் இதுவரை இன்னமும் இறுதி முடிவிற்கு வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

175 பேரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளோம் விசாரணைகள் தொடர்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசபகுப்பாய்வாளரின் ஆய்விற்காக 14 மாதிரிகளை அனுப்பியுள்ளோம்,மேலும் தொலைபேசிபகுப்பாய்வு வங்கி ஆவணங்கள் மற்றும் பல்வேறு ஆவணங்களை பெற்றுக்கொண்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேரடி தொடர்பை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் இடம்பெறுகின்றன ஆனால் இதுவரை இது தற்கொலை என்றோ கொலை என்றோ நாங்கள் தீர்மானிக்கவில்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரை சந்தேகநபர்கள் எவரையும்அடையாளம் காணவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!