பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். பாகம் - 27

#ஆன்மீகம் #கடவுள் #பிள்ளையார் #இன்று #தகவல் #spiritual #God #Pillaiyar #today #information
பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். பாகம் - 27
  1. விநாயகரை வலம் வரும்போது ஒரு முறை வலம் வந்தால் போதுமானது காரணம் தாய் தந்தையினை சுற்றி தன் பக்தியினை நிரூபித்தவரை நாமும் ஒரு முறை சுற்றினால் எல்லா ஆசிகளும் பெறுவோம் என்ற நம்பிக்கையே ஆகும்.
     
  2. விநாயகரை வணங்கினால் ஏழரைச் சனி உள்ளவர்களுக்கு அதன் தாக்கம் குறைவாக இருக்கும்.
     
  3. மிக உறுதியான தேங்காய் போல நம் ஆணவம் உடையட்டும், என்று ஆணவ மலத்தினை உடைக்கவே பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கப்படுகிறது.
     
  4. மேலும் தேங்காயை உடைத்தால் வெண்பருப்பும், இனிய நீரும் வருவது போல ஆணவம் உடைந்து வெள்ளை மனமும் இனிய மொழியும் வரும் என இத்தத்துவம் விளக்குகிறது.
     
  5. விநாயகரின் வாகனம் ஏன் எலியாக வந்ததென்றால் மனம் எலியைப்போல் ஒடித்திரிய வல்லது. அதைக்கட்டுப்படுத்தி தாங்கிக்கொள்ளவே விநாயகர் எலி மீதேறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4