உங்கள் வாழ்க்கைத் துணைக்கு இந்த ராசிக்காரர்கள் பொருத்தமாக அமைந்துவிடுவார்கள்.

#ஆன்மீகம் #திருமணம் #ஜோதிடம் #spiritual #Marriage #Horoscope
உங்கள் வாழ்க்கைத் துணைக்கு இந்த ராசிக்காரர்கள் பொருத்தமாக அமைந்துவிடுவார்கள்.

மேஷ ராசிக்கு பொருத்தமான ராசிகள் :

செவ்வாய் பகவான் ஆளக்கூடிய மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு, சுக்கிரன் ஆளும் துலாம் ராசியை சேர்ந்த நபர்கள் மிகப் பொருத்தமானதாக இருப்பதோடு, மிதுனம், சிம்மம், தனுசு, விருச்சிகம், மகரம் போன்ற ராசிகளும் பொருத்தமானதாக இருக்கும்.

​ரிஷப ராசிக்கு பொருத்தமான ராசிகள்

பொருளாதார பிரச்சினையற்ற, சுகம், வசதிகளை அனுபவிக்கும் இந்த ராசியினருக்கு கடகம், கன்னி, மீனம், மகரம் ஆகிய ராசியை சேர்ந்த வரன் மிக சிறப்பாக பொருந்தக் கூடியதாக இருக்கும்.

மிதுன ராசிக்கு பொருத்தமான ராசிகள் :

ஞானத்தைத் தரக்கூடிய புதன் பகவான் ஆளக்கூடிய மிதுன ராசிக்கு தனுசு ராசி மிக சிறப்பான பொருத்தமாகும். அதுமட்டுமில்லாமல் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம் ஆகிய ராசிகளும் நன்றாக ஒத்துப் போகக்கூடியதாக இருக்கும்.

கடக ராசிக்கு பொருத்தமான ராசிகள் :

நீர் ராசியை சேர்ந்த கடக ராசியை மனோகாரகன் எனும் சந்திர பகவான் ஆள்கிறார். கடக ராசிக்கு மகர ராசியை சேர்ந்த வரன் மிகவும் பொருத்தமானதாகும். அதோடு ரிஷபம், சிம்மம் மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசிகள் பொருத்தமான ராசிகளாகும்.

கன்னி ராசிக்கு பொருத்தமான ராசிகள் :

கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு மீன ராசியினர் சிறந்த வரனாக அமைவார்கள். இவர்களோடு ரிஷபம், கடகம், துலாம், மகரம் ஆகிய ராசியை சேர்ந்தவர்கள் நல்ல வரனாக பொருத்தமானவர்களாக இருப்பார்கள்.

சிம்ம ராசிக்கு பொருத்தமான ராசிகள் 

ஆளுமை திறன் அதிகம் கொண்ட, நவகிரகங்களின் தலைவனான சூரியன் ஆளக்கூடிய சிம்ம ராசியினருக்கு கும்ப ராசியினர் சிறந்த வாழ்க்கைத் துணையாக அமைவார்கள். அதோடு மேஷம், துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய ராசிகளும் சிம்ம ராசிக்கு பொருத்தமானதாக இருக்கும்.

துலாம் ராசிக்கு பொருத்தமான ராசிகள் :

சுக்கிரன் ஆளும் துலாம் ராசிக்கு மிகவும் பொருத்தமான ராசியாக மேஷ ராசியினர் இருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் சிம்மம், கன்னி, தனுசு, மகரம் உள்ளிட்ட ராசியை சேர்ந்தவர்களும் நல்ல வரனாக பொருந்தக்கூடியதாக இருக்கும்.

விருச்சிக ராசிக்கு பொருத்தமான ராசிகள் :

செவ்வாய் பகவான் ஆளக்கூடிய விருச்சிக ராசிக்கு ரிஷப ராசியை சேர்ந்தவர்கள் சிறந்த வாழ்க்கைத் துணையாக இருப்பார்கள். இதோடு கடகம், சிம்மம், கன்னி, மீனம் உள்ளிட்ட ராசியினரும் நல்ல பொருத்தமான வரனாக இருக்கும்.

தனுசு ராசிக்கு பொருத்தமான ராசிகள் :

தனுசு ராசியினருக்கு திருமணத்திற்கு மிகவும் பொருத்தமான ராசியாக மிதுன ராசியை சேர்ந்தவர்கள் இருப்பார்கள். மேலும் சிம்மம் மேஷம் துலாம் மற்றும் கும்ப ராசியை சேர்ந்தவர்களும் பொருத்தமான ராசிக்காரர்கள் தான்.

மகர ராசிக்கு பொருத்தமான ராசிகள் :

சனி பகவான் ஆளக்கூடிய மகர ராசியினருக்கு கடக ராசியை சேர்ந்த நபர்கள் நல்ல பொருத்தமானவர்களாக இருப்பார்கள். ரிஷபம், கன்னி, மீனம், விருச்சிகம் ஆகிய ராசியினர் நல்ல பொருத்தமானவர்களாக இருப்பார்கள்.

கும்ப ராசிக்கு எந்த ராசி பொருத்தமானவர்கள்?

சனி பகவான் ஆளும் கும்ப ராசியினாருக்கு சிம்ம ராசியினர் நல்ல பொருத்தமாக இருக்கும். அதோடு மேஷம், மிதுனம், கன்னி, துலாம் ஆகிய ராசியினர் திருமண உறவில் நல்ல பொருத்தமான வரனாக அமைவார்கள்.

மீன ராசிக்கு பொருத்தமான ராசிகள் :

மீன ராசிக்கு கன்னி ராசியினர் பொருத்தமான ராசி ஆவார். இவர்களுக்கு ரிஷபம், கடகம், துலாம், விருச்சிகம் ஆகிய ராசியை சேர்ந்த நபர்கள் சிறந்த வாழ்க்கைத் துணையாக இருப்பார்கள்.


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4