அமெரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம்-தலைமை காவல்துறை அதிகாரி
#America
#Parliament
#Attack
#Warning
Prasu
2 years ago

அமெரிக்க நாட்டில் கடந்த 2021 ஆம் வருடம் ஜனவரி 6ஆம் தேதி அன்று அதிபர் தேர்தலில் வென்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் அதிபர் ட்ரம்பின் ஆதரவாளர்கள் திடீரென்று நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர்.
அவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் ஐந்து நபர்கள் உயிரிழந்தார்கள். இதனையடுத்து நாடாளுமன்றம் இருக்கும் வாஷிங்டனில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு, ஒரு ஆண்டிற்கு நடைமுறையில் இருந்தது.
இந்நிலையில், அப்போது நடந்த சம்பவத்தை போன்று மீண்டும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற தலைமை காவல் அதிகாரியாக இருக்கும் தாமஸ் மேங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே, அதிக கவனமுடன் இருக்க வேண்டும் என்று அவர் காவல்துறையினரை அறிவுறுத்தியிருக்கிறார்.



