பிரான்ஸில் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
                                                        #world_news
                                                        #France
                                                    
                                            
                                    Kanimoli
                                    
                            
                                        2 years ago
                                    
                                பிரான்ஸில் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஊதியம் பெறும் அரசாங்க ஊழியர்களுக்கே சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது.
அதற்கமைய, 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி அன்று தங்கள் சம்பளத்தை மறுமதிப்பீடு செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது.
மாதம் 1,712.06 யூரோவுக்கும் குறைவாக சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இது அரச ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நல்ல செய்தியாக இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில் குறைந்தபட்சம் சில அரசு ஊழியர்களாவது, ஜனவரி முதலாம் திகதி முதல் சம்பள உயர்வை பெறுவார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கும் ஒரு விடயமாக உள்ளதென ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.