பிரான்ஸில் முதியவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்! பலர் படுகாயம்
Mayoorikka
2 years ago

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் முதியவர் ஒருவர், மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்,
70 வயதான அவர், குர்திஸ் கலாச்சார மையத்தில் வைத்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.
எனினும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் தெரியவரவில்;லை.
காவல்துறையினர், அவரிடம் இருந்து துப்பாக்கியை பறித்து அவரை கைது செய்வதற்குள் பலர் காயமடைந்தனர்
இந்தநிலையில் தாக்குதல் இடம்பெற்ற இந்தப்பகுதியை தவிர்க்க வேண்டும் என்று பாரிஸின் காவல்துறை கோரியுள்ளது.




