பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். - பாகம் 11

#spiritual #God #Pillaiyar
பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். - பாகம் 11
  1. விநாயகப்பெருமானுக்கு கணபதி என்றும் ஒரு பெயர் உள்ளது. அதாவது க என்பது ஞானத்தை குறிக்கையில் ண என்பது ஜீவர்களின் மோட்சத்தை குறிக்கிறது. பதி என்னும் பதம் தலைவன் எனப்பொருள்படுகிறது.
     
  2. விநாயகருக்கு விநாயகி, வைநாயகி, விக்கேனஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி ஐங்கினி எனும் பெண்பால் சிறப்பு பெயர்களும் உண்டு. 
     
  3. விநாயகர் வழிபாடு இலங்கை, இந்தியா பர்மா, கயா, ஜாவா, பாலி, இந்தோனேசியா, சீனா, நேபாளம், திபெத், துருக்கி, மெக்கிச்ககோ, பெரு, எகிப்து, கிரேக்கம், இத்தாலி என பல நாடுகளில் பரவி பல நுாற்றாண்டுகளாக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
     
  4. தமிழ்நாடு சென்னையில் உள்ள கோவிலான மத்திய கைலாசத்தில் ஆதியந்த பிரபு விநாயகா் வீற்றிருக்கார். இவர் ஒரு பாதி கணபதியும், மற்றயது மாருதியுமாக இணைந்த ஒரு புதுமையான அமைப்பாக காணப்படுகிறார். இவருக்கு நாமே ஆரத்தி புசை செய்யலாம் என்பது சிறப்பு.
     
  5. இந்தியா மும்பையில் கடந்த ஆண்டு சுமார் 2 இலட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு சுமார் 20 இலட்சம் விநாயகர் சிலைகள் வரை வைக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4