எந்நாடானாலும் நம் நாட்டிற்கு ஈடாகுமா? இலங்கையைப்பற்றி சில குறிப்புக்கள்..

#history #NorthernProvince
எந்நாடானாலும் நம் நாட்டிற்கு ஈடாகுமா? இலங்கையைப்பற்றி சில குறிப்புக்கள்..
 • வடக்கில் சிறிய மாவட்டம் – யாழ்ப்பாணம்
 • வடக்கில் பெரிய மாவட்டம் – முல்லைத்தீவு
 • வடக்கில் கடற்பரப்பில்லாத மாவட்டம் – வவுனியா.
 • வடக்கில் குளங்கள் அதிகமாக காணப்படும் மாவட்டம் – முல்லைத்தீவு
 • வடக்கில் காணப்படும் பெரிய தீவு – நெடுந்தீவு
 • வடக்கில் சிலிக்கன் மணல் காணப்படும் இடம் - நாகர்கோவில்
 • வடக்கு மாகாணசபை அமைந்துள்ள இடம் – கைதடி
 • வடமாகாணத்தில் சனத்தொகை அடர்த்தி கூடிய மாவட்டம் - யாழ்ப்பாணம்
 • வடமாகாணத்தில் சனத்தொகை அடர்த்தி குறைந்த மாவட்டம் - முல்லைத்தீவு
 • வடமாகாணத்தின் பரப்பளவு – 8884 சதுர கிலோமீட்டர்
 • வடமாகாணத்தின் நிலப்பரப்பு 8290 சதுர கிலோமீட்டர்
 • வடக்கில் எண்ணெய் வளம் உள்ள மாவட்டம் – மன்னார்
 • வடக்கில் சிறுவர் நீதிமன்றம் அமைந்துள்ள இடம் – குருநகர், யாழ்ப்பாணம்
 • வடக்கில் அல்லது இலங்கையில் நீளமான பாலம் – வேலணை_புங்குடுதீவு
 • வடக்கில் காணப்படும் முனை –பருத்தித்துறை (பேதுறு)
 • வடக்கில் காணப்படும் நீரேரிகள் - கச்சாய் அல்லது கிளாலி, சுண்டிக்குளம், தொண்டைமானாறு
 • இலங்கையின் வடக்கின் புராதனபெயர் - நயினாதீவு (நாகதீவு)
 • வடக்கில் இருந்து பாராளுமன்றம் சென்ற முதலாவது பெண் - 15 February 1989 - 24 June 1994 – திருமதி புலேந்திரன் ராஜமனோகரி – வன்னி
 • வடக்கில் ஓட்டு தொழிற்சாலை ஒட்டுசுட்டானிலும், உப்பளம் ஆனையிறவிலும், சீமேந்து
 • தொழிற்சாலை காங்கேசன்துறையிலும் இரசாயன தொழிற்சாலை பரந்தனிலும் காணப்படுகிறது
 • வடமாகாணத்தில் பாதுகாக்கப்பட்ட பறவைகள் விலங்குகள் காப்பகம் என அறிவிக்கப்பட்ட இடம் - சுண்டிக்குளம் (கிளிநொச்சி மாவட்டம்)
 • வேலணை தீவு அல்லது லைடன் தீவுகள் எனப்படுவது வடக்கில் பெரிய கூட்டிணைக்கப்பட்ட தீவாகும்
 • யாழ்ப்பாணத்தில் காணப்படும் ஒரே ஆறு – வழுக்கையாறு (பருவகால ஆறு)
 • இலங்கையில் காணப்படும் குளங்களில் மூன்றாவது பெரிய குளம் - இரணைமடுக் குளம்
 • "செங்கையாழியன்" என அழைக்கப்படும் வடமாகாணத்தின் மறைந்த எழுத்தாளர் - கலாநிதி க.குணராசா
 • வடக்கில் உள்ள கைத்தொழிற்பேட்டை - அச்சுவேலி
 • வவுனிக்குளத்தை கட்டுவித்தவன் - எல்லாளன்.
 • பனைமரத்தின் விஞ்ஞான பெயர் - 'Borassus flabellifer'
 • வடக்கிற்கான ரயில் சேவை 1989.01.19 பின் 13.10.2014 உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
 • வடக்கு ரயில் பாதையை புனரமைத்த இந்திய நிறுவனம் – இர்கொன்
 • இரணைமடு நீர் விநியோக திட்டத்திற்கு உதவி வழங்குவது - ஆசிய அபிவிருத்தி வங்கி
 • இரணமடு நீர் விநியோக திட்டத்திற்கு மாற்றீடான மற்றுமொரு திட்டம் - ஆறுமுகம் திட்டம்.
 • யாழ்ப்பான பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது - ஓகஸ்ட் 1, 1974
 • வடமாகாணத்தில் ஒவ்வொரு வருடமும் மரம் நடுகை தினம் நவம்பர் 01 – 30 வரை கொண்டாடப்படுகிறது.
 • மருத மரத்தின் விஞ்ஞான பெயர் – Terminalia elliptica.
 • வெண்டாமரை பூவின் விஞ்ஞான பெயர் – Nelumbo nucifera.
 • ஆண் மானின் விஞ்ஞான பெயர் – Axis axis.
 • சுன்னாகம் கழிவு ஒயில் தொடர்பான நிறுவனம் - நொதேர்ன் பவர்
 • யாழ்ப்பான நூல்நிலையம் எரிக்கப்பட்ட ஆண்டு - 31.05.1981
 • யாழ்ப்பாண வரலாற்றை கூறும் நூல்கள் - வையாபாடல், யாழ் வைபவ மாலை.
 • யாழ்ப்பான பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் – சேர் பொன் இராமநாதன்.
 • முறிந்த பனை (The Broken Palmyrah) என்ற நூலை எழுதியவர்கள் – ராஜினி திராணகம, ராஜன் ஹூல், சிறிதரன், தயா சோமசுந்தரம்.
 • மன்னருக்கான ரயில் சேவைகள் 1914ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டாலும் யுத்தத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டது - 14.03.2015.
 • மன்னார் – நாவற்குழி பிரதான பாதை A32.
 • பரந்தன் – முல்லைத்தீவு பிரதான பாதை A35.
 • மாங்குளம் – முல்லைத்தீவு பிரதான பாதை A34.
 • முல்லைத்தீவோடு இணைக்கப்பட்ட பிரதேசம் – மணலாறு (வெலிஓயா).
 • யாழ் நூலகம் ஆரம்பிக்கப்பட்டது – 1933 ஆம் ஆண்டு.
 • இலங்கையில் வறுமை கூடிய மாவட்டம் -கிளிநொச்சி.
 • மதுபான விற்பனை மற்றும் எய்ட்ஸ் பாதிப்பு அதிகரித்து காணப்படும் மாவட்டம் - யாழ்ப்பாணம்
 • யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து 1984 பெப்ரவரியில் கிளிநொச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டது.
 • யாழ் கோட்டை போர்த்துகேயரால் 1625ல் கட்டப்பட்டது.
 • தற்போது காணப்படும் யாழ் கோட்டை ஒல்லாந்தரால் உடைக்கப்பட்டு 1658 யூன் 23 ற்கு பின் கட்டப்பட்டதாகும்.
 • பண்டைய யாழ்ப்பாண அரசின் நாணயம் – சேது நாணயம்.
 • யாழ்ப்பாண அரசின் பழைய சின்னமாக விளங்குவது – நந்தி.
 • வன்னி இராட்சியம் வீழ்ச்சியடைந்தது - 1803ம் ஆண்டு.
 • ஒல்லாந்தரால் சொத்துரிமை தொடர்பாக யாழ்ப்பாணத்துக்கு மட்டும் உரித்தான சட்டம் – தேசவழமைச் சட்டம்.
 • யாழ் நூலை எழுதியவர் – சுவாமி விபுலானந்தர் 1947.
 • சுவாமி விபுலானந்தர் இயற்பெயர் – மயில்வாகனன் 1892.
 • சைவசமய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் - ஆறுமுகநாவலர் (1822 டிசம்பர் 18 ஆறுமுகம்பிள்ளை).
 • நாவலர் 1872 இல் முதல் உருவாகிய சைவ ஆங்கிலப் பாடசாலை - வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலை.
 • மன்னாரில் எண்ணெய் வள ஆய்வில் ஈடுபட்ட நிறுவனம் – கெய்ன் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான கெய்ன் லங்கா