இரண்டு நகரங்களை மாநகர சபையாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கிகாரம்!
Mayoorikka
2 years ago
தற்போதுள்ள உள்கட்டமைப்பு மற்றும் மனித வளத்தைப் பயன்படுத்தி அம்பாறை மற்றும் மன்னார் நகர சபைகளை மாநகர சபையாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
உள்கட்டமைப்பு மற்றும் மனித வளத்தைப் பயன்படுத்தி, கூடுதல் வளங்களைச் செலவிடாமல், நகர்ப்புற வளர்ச்சித் தேவைகளை நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போதுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் நகர சபைகளாக மாற்ற முடியுமா என்பது தொடர்பில் விசாரணை நடத்துமாறு அமைச்சரவையில் பிரதமரிடம் ஜனாதிபதி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.