பலாலிக்கான விமான சேவையை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்
Prabha Praneetha
2 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
தொடர்ச்சியான பல்வேறு முயற்சிகளின் பலனாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பலாலிக்கான விமான சேவையை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்ட பலாலிக்கான விமான சேவை இன்று மீண்டும் ஆரம்பமாகிய நிலையில் இதனால் வடக்கு மக்கள் மட்டுமன்றி கிழக்கு மற்றும் வட மத்திய மாகாண மக்களும் நன்மை என கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அடிப்படை வசதிகளுடன் மட்டுப்படுத்தப்பட்டளவில் சேவைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளது என்றும் விமான நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை கட்டம் கட்டமாக விஸ்தரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.



