ஸ்ரீ பாத முற்றத்தில் நபரொருவர் ஒருவர் மரணம்
Prathees
2 years ago
ஸ்ரீ பாதஸ்தானத்திற்கு யாத்திரைக்கு வந்த நபர் ஒருவர் ஸ்ரீ பாத முற்றத்தில் உயிரிழந்துள்ளார்.
காலி இமதுவ பிரதேசத்தில் வசிக்கும் 96 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் நேற்றைய தினம் ஸ்ரீ பாத முற்றத்திற்கு வந்த நிலையில் இன்று வரை முற்றவெளியில் அன்னதானம் செய்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திக் ஓயா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நல்லதண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.