ரேஷன் அட்டையில் மாற்றம் செய்ய சென்னையில் நடைபெறவுள்ள குறைதீர் முகாம்

Prasu
3 years ago
ரேஷன் அட்டையில் மாற்றம் செய்ய சென்னையில் நடைபெறவுள்ள குறைதீர் முகாம்

சென்னையில் ரேஷன் அட்டை குறைதீர் முகாம் வரும் சனிக்கிழமை (டிசம்பர் 10) நடைபெற உள்ளது என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் சார்பாக பொது வினியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் மாதம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

எங்கே, எப்போது?

  • இந்த மாதத்துக்கான குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி கமிஷனர் அலுவலகங்களில் வரும் டிசம்பர் 10-ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

என்னென்ன மாற்றலாம்?

  • பெயர் சேர்த்தல்
  • பெயர் நீக்கம்
  • முகவரி மாற்றம்
  • செல்போன் எண் பதிவு அல்லது மாற்றம் செய்தல்

மேலும்...

  • புதிய ரேஷன் அட்டை கோருதல்
  • நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல்
  • புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?

  • ரேஷன் அட்டை
  • ஆதார் அட்டை
  • நீங்கள் எந்த மாற்றம் செய்ய வேண்டுமோ அதற்கான ப்ரூப் (Proof)

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4