குஜராத்தில் அந்தரங்க உறுப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 12 வயது சிறுவனின் சடலம்

Prasu
3 years ago
குஜராத்தில் அந்தரங்க உறுப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 12 வயது சிறுவனின் சடலம்

குஜராத் மாநிலம், ஜாம்நகர் மாவட்டத்துக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பங்கஜ் தாமோர் என்பவர் தன் குடும்பத்தாருடன், கடந்த 6 ஆண்டுகளாக விவசாய தொழில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், பங்கஜ் தாமோர் பணியாற்றும் பண்ணைக்கு அருகில், இவருடைய 12 வயது மகனின் உடல் அந்தரங்க உறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. 

இது தொடர்பாக காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு காவல்துறை வந்தடைந்தனர். மேலும் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில்,12 வயது சிறுவன், செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றிருக்கிறார். ஆனால், வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், பெற்றோர் வேலை செய்யும் பண்ணை அருகில் சடலம் கிடப்பதாக எங்களுக்கு தகவல் வந்தது. 

உடனே சம்பவ இடத்துக்கு விரைந்தோம். அங்கு சிறுவனின் அந்தரங்க உறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தது. அங்கு சிறுவனின் உடலில் இருந்த காயங்களைப் பார்க்கும்போது, கரும்பு வெட்டப் பயன்படுத்திய பில் கொக்கி கொலை ஆயுதமாக பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இந்த ஆயுதத்தால் சிறுவனின் தலையை தாக்கியிருக்கின்றனர். மேலும் அவரின் அந்தரங்க உறுப்பு வெட்டப்பட்டிருந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்குப் பிறகே முழு விவரம் தெரியவரும். விசாரணையில் காவல்துறைக்கு உதவ தடயவியல் நிபுணர்கள் குழு வரவழைக்கப்பட்டிருக்கிறது. 

மேலும், இது தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டு, தனிப்பட்ட விரோதம் காரணமாக சிறுவன் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4