ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது

Kanimoli
3 years ago
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்;பு சபையில், 2021 மற்றும் 2022 ஆகிய 2 ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இந்தியா செயல்படுகிறது.
மாதந்தோறும் பாதுகாப்பு சபையின் தலைமை பொறுப்பை ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் ஏற்று வருகின்றன.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதமும்  இந்தியா இந்த சபைக்கு தலைமை வகித்தது.
இந்தநிலையில், நடப்பு டிசம்பர் மாதத்துக்கும் இந்திய பிரதிநிதி மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி நேற்று ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா காம்போஜ், தலைவர் இருக்கையில் அமர்ந்தார்.
இந்தியா தலைவராக இருக்கும் இந்த மாதத்தில், பயங்கரவாத எதிர்ப்பு அமர்வுகள் நடைபெறவுள்ளன.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த அமர்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4