2023 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் - ரிஷபம்

Nila
3 years ago
2023 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் - ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு 2023ஆம் ஆண்டு அதிர்ஷ்டமான ஆண்டாக இருக்கப்போகிறது. வேலை பார்க்கும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். சனி பகவான் 10ஆம் வீட்டிற்கு பெயர்வதால், வேலையில் இருப்பவர்களுக்கு அற்புதங்கள் நிகழப்போகிறது.

சனி பகவான் சாதகமாக இருக்கிறார். வேலை தொழிலில் எதிர்பாராத வளர்ச்சி ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். சனிபகவானின் பார்வையும் சாதகமான இடங்களில் விழுவதால் உங்களுக்கு யோகங்கள் கிடைக்கப்போகிறது. குடும்ப விசயத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். நிரந்தரமான வேலை கிடைக்கும்.

எவ்வளவோ கஷ்டங்களை கடந்து வந்திருக்கும் ரிஷப ராசிக்காரர்களே, 2023ஆம் ஆண்டு பொன்மழை பொழியப்போகிறது. நிறைய நற்பலன்களை அனுபவிக்கத் தயாராகுங்கள்.

2023 புத்தாண்டு ரிஷப ராசி பொதுப்பலன்

ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, திட்டமிட்ட வேலைகளை முடிப்பதற்கு இது ஒரு உற்சாகமான காலமாக இருக்கும். உங்கள் வேலையின் தரம் உங்கள் மீதான அபிப்ராயத்தை மேம்படுத்தும். பணியிடத்தில் சகபணியாளர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நீங்கள் ஒரு முக்கியமான பணிக்காக பயணம் மேற்கொள்ளலாம். உங்கள் தொடர்பு மற்றும் செயல்களில், குறிப்பாக உங்கள் உறவினர்கள் விஷயத்தில் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த தியானத்தை பயிற்சி செய்ய வேண்டும், மேலும் இது வேலையில் கவனம் செலுத்துவதற்கு உதவியாக இருக்கும். குடும்பத்தில் குழந்தைப் பேறு கிடைக்கும்இருக்கலாம். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

காதல் / குடும்ப உறவு

உங்கள் துணையுடன் உங்கள் எண்ணங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வீர்கள், மேலும் உங்கள் அணுகுமுறையில் அதிக வெளிப்படைத்தன்மையைக் காட்டுவீர்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் நம்பகமான உறவைப் பேணுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உங்கள் தாம்பத்திய வாழ்க்கை சில ஈகோ மோதல்கள் வந்து போகும். திருமண வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். காதல் கனிந்து திருமணத்தில் முடியும். குழந்தை பிறப்பதற்கான யோகம் கை கூடி வந்துள்ளது. நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்.


நிதிநிலை:

இந்த ஆண்டு உங்கள் நிதிக்கு முன்னேற்றமான நேரமாக இருக்கும். மற்றவர்களுடனான நிதி பரிவர்த்தனைகளில் நீங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது இழப்புகளைத் தவிர்க்க உதவும். உங்கள் வருமானம் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்கும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

உத்தியோகம்

இந்த ஆண்டு, பணியிடத்தில் உங்கள் வேலைகள் சீராகவும் வெற்றிகரமாகவும் தொடரும். வேலையில் புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்கும். உங்கள் வேலையில் நீங்கள் பல புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். இது உங்கள் தகுதியை நிரூபிக்க உதவும். உத்தியோகத்தில் உங்கள் செயல்திறனை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். உடன் பணிபுரிபவர்களுக்கும் சக ஊழியர்களுக்கும் இடையிலான நல்ல புரிதல் உங்களுக்கு உதவும். சூழ்நிலைகளைக் கையாள்வதில் நீங்கள் தொடர்ந்து சாதுரியமாகச் செயல்பட வேண்டும். வேலை தொழிலில் எதிர்பாராத வளர்ச்சி ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம் :

இந்த வருடம் உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். என்றாலும் பரபரப்பான வேலை மற்றும் பல பயணங்கள் காரணமாக நீங்கள் சற்று சோர்வாக இருப்பீர்கள். உடல் வலிமையை அதிகரிக்க சரியான ,சாத்தான் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஆரோக்கியப் பிரச்சினைகள் இருந்தால் உடல்நலப் பரிசோதனையின் மூலம் அதனை ஆரம்பத்திலேயே கண்டறியுங்கள்.

மாணவர்களுக்கு :

இந்த புத்தாண்டில் உங்களின் பல ஆசைகள் நிறைவேறும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4