தனுஷ்காவிற்கு பிணை வழங்குவதற்காக பணம் செலுத்திய இலங்கை கிரிக்கெட் நிறுவனம்
Mayoorikka
2 years ago

தனுஸ்க குணதிலக்கவிற்கு பிணை வாங்குவதற்காக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம், அவுஸ்திரேலிய சட்ட நிறுவனம் ஒன்றுக்கு 38,000 டொலர்களை செலுத்தியுள்ளது.
அத்தோடு, இந்த தொகைக்கு மேலதிகமாக பல உதவிகளும் அவருக்கு வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்ட தனுஸ்க குணதிலக்க, வடமேல் சிட்னியில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும்,அவரது கடவுச்சீட்டு பறிக்கப்பட்டுள்ளதுடன், இரவு வேளையில் நடமாடவும், சமூக வலைத்தளங்கள் மற்றும் டிண்டர், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தனுஸ்க 150,000 டொலர்கள் ரொக்கப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



