2 கிலோ எடையுள்ள கொக்கைன் எனும் போதை பொருளை சவுரி முடிக்குள் கடத்த முயன்ற பெண்கள் கைது

#drugs
Keerthi
2 years ago
2 கிலோ எடையுள்ள கொக்கைன் எனும் போதை பொருளை சவுரி முடிக்குள் கடத்த முயன்ற பெண்கள் கைது

போதை பொருள், தங்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கடத்த முயற்சி செய்யும் நபர்களை விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கையும் களவுமாக  பிடித்தாலும் அவர்கள் பல்வேறு யுத்திகளை பயன்படுத்தி தங்களது வேலையை செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள். 

அந்த வகையில்  பொலிவியா நகரில் தலையில் மாட்டிக்கொள்ளும் சவுரி முடிக்குள் சுமார் 2 கிலோ எடையுள்ள கொக்கைன் எனும் போதை பொருளை கடத்த முயற்சி செய்த 2 பெண்கள் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரு வேறு விமான நிலையங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் அந்த பெண்கள் தங்களது தலையில் வைத்திருந்த சவுரி முடிக்குள் மாத்திரை வடிவத்தில் போதை பொருட்களை மறைத்து வைத்து கடத்த முயற்சி செய்துள்ளது தெரியவந்துள்ளது. 

இந்த போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, அந்த பெண்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!