நாடாளுமன்றத்தின் வரவு செலவுத் திட்டம் அமைப்பதற்கான வரைவு சட்டமூலம் தொடர்பில் விசேட கூட்டம்

நாடாளுமன்றத்தின் வரவு செலவுத் திட்ட அலுவலகத்தை அமைப்பதற்கான வரைவு சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட விசேட கூட்டம் நேற்று(10) நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்குபற்றுதலுடன் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் வரவு செலவுத் திட்ட அலுவலகத்தை அமைப்பது தொடர்பான சட்டமூலம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடினர். மேலும், இந்த யோசனையை மேலும் ஆய்வு செய்து இரண்டு வாரங்களில் மீண்டும் கூடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் லச்மன் கிரியெல்ல, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, அலி சப்ரி, டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, வாசுதேவ நாணயக்கார, காமினி லொக்குகே, ரோஹித அபேகுணவர்தன, கபீர் ஹாசிம், குமார வெல்கம, சாகர காரியவசம், ஷான் விஜயலால் டி சில்வா, விமல் வீரவன்ச, ஹர்ஷ டி சில்வா, வீரசுமண வீரசிங்க, வி. ராதாகிருஷ்ணன் மற்றும் ஏ.எல்.எம். அதாவுல்லா ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்



