ரஷ்யப்போரால் 50 லட்சம் ஏக்கர் வனப்பகுதிகள் அழிப்பு - உக்ரைன் ஜனாதிபதி குற்றச்சாட்டு
#Ukraine
#Zelensky
Prasu
2 years ago
ரஷ்யா, கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இதில் இரண்டு தரப்பை சேர்ந்த மக்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், உக்ரைன் நாட்டின் பல நகர்களை ரஷ்ய படையினர் கைப்பற்றி விட்டனர்.
இந்நிலையில், எகிப்தில் நடக்கும் காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச உச்சி மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதியான ஜெலன்ஸ்கி காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது, காலநிலை மாற்றத்தை எதிர்த்து உலகம் போராடிக் கொண்டிருப்பதை ரஷ்யா மேற்கொள்ளும் தாக்குதல் தடுக்கிறது.
மேலும் இந்த போரால் தங்கள் நாட்டில் சுமார் 50 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட காட்டுப் பகுதியில் அழிந்துவிட்டன என்று கூறியிருக்கிறார்



