இலங்கைக்கான பிரித்தானிய வர்த்தகத் தூதுவர் நாட்டுக்கு விஜயம்
Prabha Praneetha
3 years ago
இலங்கைக்கான பிரித்தானிய வர்த்தகத் தூதுவர் Davies of Abersoch மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார்.
அவர் நேற்று நாட்டை வந்தடைந்ததாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார பங்காளித்துவத்தின் பரஸ்பர வளர்ச்சியை அடைவதற்கும் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக மற்றும் திட்ட ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதும் இந்த விஜயத்தின் நோக்கமாகும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த விஜயத்தின்போது அவர், நாட்டில் வர்த்தக வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் பல வர்த்தக மற்றும் அரசாங்க தரப்புகளுடன் கலந்துரையாடவுள்ளார்.