நாடாளுமன்ற அமர்வு இன்று முற்பகல் 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது

Kanimoli
2 years ago
நாடாளுமன்ற அமர்வு இன்று முற்பகல் 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது

நாடாளுமன்ற அமர்வு இன்று (10.11.2022) முற்பகல் 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

முற்பகல் 09.30 மணி முதல் முற்பகல் 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, முற்பகல் 10.30 முதல் பிற்பகல் 5 மணி வரை,

சிறுகோரிக்கை நீதிமன்றங்களின் நடவடிக்கைமுறை, நீதித்துறை (திருத்தம்), மாகாணங்களின் மேல் நீதிமன்றம் (சிறப்பு ஏற்பாடுகள்) (திருத்தம்), குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்), கண்டிய திருமண, மணநீக்கம் (திருத்தம்), நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தம்), குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்), சிறுவர்கள் மற்றும் இளம் ஆட்கள் (திருத்தம்), அபாயகரமான விலங்குகள் (திருத்தம்), சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் விதிகள், கடற்றொழில், நீர்வாழ் உயிரினங்கள் சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அதன்பின்னர், பிற்பகல் 5 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!