பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல் - 3 பொலிஸார்,அதிபர் மற்றும் ஆசிரியருக்கு விளக்கமறியல்

Prasu
2 years ago
பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல் - 3 பொலிஸார்,அதிபர் மற்றும் ஆசிரியருக்கு விளக்கமறியல்

ஹொரணை - மில்லனிய பிரதேச பாடசாலை  ஒன்றின், வகுப்பாசிரியரின் பணத்தை திருடியதாகத் தெரிவித்து மாணவர்கள் இருவரை  தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட  மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் ஒருவரும்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் சந்தேக நபர்கள் ஆஜர் செய்யப்பட்டபோதே இம்மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஹொரணை - மில்லனிய பிரதேச பாடசாலை ஒன்றின்  ஆசிரியர் ஒருவரின் பணத்தை  திருடியதாக சந்தேகித்து 5 ஆம் ஆண்டு மாணவர்கள் சிலர் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

பாணந்துறை பிராந்தியத்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!