ஐரோப்பிய நாடான கிரீஸில் கடலில் விழுந்து மாயமான 60 அகதிகள்
Prasu
2 years ago

ஐரோப்பிய நாடான கிரீஸ் அருகே அளவுக்கு அதிகமான அகதிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமாா் 60 பேர் காணாமல் போயுள்ளரன்.
கிரீஸ் தலைநகா் ஏதென்ஸ்ஸுக்கு அருகேயுள்ள தீவைச் சுற்றிலும் கடுமையான வானிலை நிலவி வந்தது.
இந்த நிலையில், அந்தப் பகுதி வழியாக அளவுக்கு அதிகமான அகதிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஷவிபத்துப் பகுதியிலிருந்து 9 போ் மீட்கப்பட்டனர். எனினும், சுமாா் 60 போ் தொடா்ந்து காணவில்லை என அந்த நாட்டு கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவா்களை தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து நேரிட்ட கடல் பகுதி மிகவும் ஆபத்து நிறைந்த பகுதி என்று கூறப்படுகிறது.



