கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து (Krishna's Butterball)) உலகத்தின் அதிசயக் கல்

Nila
3 years ago
கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து (Krishna's Butterball)) உலகத்தின் அதிசயக் கல்

கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து (Krishna's Butterball)) உலகத்தின் அதிசயக் கல் எனவும் அறிவியலில் விவரிக்கப்படாத மர்மங்களில் இதுவும் ஒன்று என ஆய்வுகள் சொல்கின்றன.
இக் கல்லை வான் இறைக்கல் என்றும் அழைக்கப்படுகிறது.
கருங்கலால் ஆன பெரிய உருண்டை வடிவத்தில் தோற்றமளிக்கும் இக்கருங்கல் உருண்டை தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் கடற்கரை அருகே சிறு குன்றின் மீது அமைந்துள்ளது. இக் கல் கீழே விழும் நிலையில் உள்ளது போலிருந்தாலும் கீழே யாராலும் விழுத்தவே முடியாதுள்ளது.
இக்கருங்கல் உருண்டை 6 மீட்டர் உயரமும், 5 மீட்டர் அகலமும் 250 டன் எடையும் கொண்டது. கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து, குன்றின் சரிவில் நான்கடி பரப்பளவில் 1,200 ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது. இந்தியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரத்திற்கு சென்று  இக்கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்தைக் கண்டுச் செல்கின்றனர்.

இந்து தொன்மவியலின் படி, கிருஷ்ணர் தன் தாய் யசோதையின் பாணையிலிருந்த வெண்ணெயை திருடித் தின்ற செயலை நினைவு கூறும் வகையில் இக்கல் உருண்டைக்கு கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து என அழைக்கப்படுகிறது.

பல்லவ மன்னர் முதலாம் நரசிம்ம பல்லவன் கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து என அழைக்கப்படும், இந்த கருங்கல் உருண்டையை குன்றிலிருந்து கீழே இறக்க செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

1908-இல் சென்னை மாகாணத்தின் ஆளுநாராக இருந்த ஆர்தர் ஹேவ்லாக், எந்நேரத்தில் கீழே விழும் நிலையில் இருக்கும் இப்பெரிய உருண்டையான கல்லை, பாதுகாப்பு காரணம் கருதி ஏழு யானைகளின் உதவியால் குன்றிலிருந்து கீழே இறக்க முயற்சி எடுத்தார். ஆனால் இவரது முயற்சி வெற்றிபெறவில்லை.

இந்த கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து பாறாங்கல் ஏறத்தாழ ஆறு மீட்டர் (20 அடி) உயரமும், ஐந்து மீட்டர் (16 அடி) அகலமும் கொண்டது. மேலும் சுமார் 250 டன்கள் எடையும் கொண்டது. இது உயரமான அஸ்திவாரத்தின் மேல் ஒரு சரிவில் மிதந்து நிற்பதாகத் தெரிகிறது, இது இயற்கையாகவே அரிக்கப்பட்ட மலையின் பாறையாகும். இது 1,200 ஆண்டுகளாக அதே இடத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இப்பாறையின் பின்புறத்தில் உள்ள ஒரு பகுதி அரிக்கப்பட்டு, அரை கோளப் பாறை போல தோற்றமளிக்கும் அதே வேளையில், மற்ற மூன்று பக்கங்களிலிருந்தும் வட்ட வடிவமாகத் தெரிகிறமையும் இதன் சிறப்பம்சம் ஆகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4