முக்கிய இரண்டு விமான சேவைகளை இலங்கைக்கு மீண்டும் ஆரம்பிக்கவுள்ள நிறுவனங்கள்!
Mayoorikka
2 years ago

ஏர் பிரான்ஸ் மற்றும் KLM Royal Dutch Airlines ஆகியவை அடுத்த மாதம் முதல் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளன.
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது டுவிட்டர் பதிவில், எயார் பிரான்ஸ் மற்றும் KLM ஆகியன நவம்பர் 4ஆம் திகதி முதல் இலங்கைக்கு சேவைகளை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த விமான நிறுவனங்கள் வாரத்திற்கு 4 விமானங்களை இலங்கைக்கு இயக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.



