22ஆவது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டது
Prathees
2 years ago

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று மாலை நாடாளுமன்றில் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பிலான வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இதில், 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக 179 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினராக சரத் வீரசேகர எதிராக வாக்களித்தார்.
இதற்கமைய, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் 178 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நேற்றும், இன்றும் விவாதங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



