27 வயதுடைய இளைஞன் இரவு உறங்கச் சென்றுள்ள நிலையில் நேற்று காலையில் சடலமாக மீட்பு

Kanimoli
3 years ago
27 வயதுடைய இளைஞன் இரவு உறங்கச் சென்றுள்ள நிலையில் நேற்று காலையில் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் மேசன் வேலையில் ஈடுபட்டு வந்த விஜயபாகு நிதர்ஷன் என்ற 27 வயதுடைய இளைஞன் நேற்று முன்தினம் இரவு உறங்கச் சென்றுள்ள நிலையில் நேற்று காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீடு ஒன்றின் கட்டுமான பணிக்காக யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து கொண்டிருந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞரின் உயிரிழப்பு தொடர்பில் விசாரணை செய்யப்பட்ட வேளை குடும்பத் தகராறு காரணமாக சில தினங்களுக்கு முன்னர் கைகலப்பு ஏற்பட்டு உடலில் காயங்கள் ஏற்பட்டமையால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதனை யாழ்ப்பாணம் கோப்பாய் தடைவியல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறப்புச் சம்பவம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4