பல அத்தியாவசிய பொருட்களின் விலை சந்தையில் குறைவடைந்துள்ளது

Kanimoli
3 years ago
 பல அத்தியாவசிய பொருட்களின் விலை சந்தையில் குறைவடைந்துள்ளது

அத்தியாவசிய உணவு பொருட்கள் தொடர்பில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது எனவும் பல அத்தியாவசிய பொருட்களின் விலை சந்தையில் குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் தெரிவித்ததாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும், இன்றைய ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் வினவிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்படி, பருப்பு கிலோவொன்றின் விலை 685 ரூபாவிலிருந்து 398 ரூபாவாக குறைவடைந்துள்ளதாகவும், நாடு அரிசி கிலோவொன்றின் விலை 220 ரூபாவிலிருந்து 165 ரூபாவாகவும், வெள்ளை பச்சையரிசி கிலோவொன்றின் விலை 210 ரூபாவிலிருந்து 160 ரூபாவாகவும், சீனி கிலோவொன்றின் விலை 375 ரூபாவிலிருந்து 275 ரூபாவாகவும், கோதுமை மா கிலோவொன்றின் விலை 395 ரூபாவிலிருந்து 275 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டார் என பந்துல குணவர்தன தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பால்மா விலை குறைப்பு தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும்,

இந்த விலை குறைப்பு தொடர்பான சந்தை நிலைமைகளை தொடர்பில் வர்த்தக அமைச்சர் ஊடக சந்திப்பொன்றின் ஊடாக விளக்கமளிப்பாரென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4