ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் பிரதமர் மஹிந்தராஜபக்சவுக்கும் இடையில் இன்று அவசர சந்திப்பு

Kanimoli
3 years ago
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் பிரதமர் மஹிந்தராஜபக்சவுக்கும் இடையில் இன்று அவசர சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் பிரதமர் மஹிந்தராஜபக்சவுக்கும் இடையில் இன்று அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கலந்துரையாடல் இன்று மாலை 5 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஜனாதிபதியுடன் மஹிந்த ராஜபக்ச நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் இடையே தொலைபேசி வாயிலாக கலந்துரையாடல் இடம்பெற்றிருந்த நிலையில், இன்று மஹிந்த ராஜபக்ச அவசரமாக ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளமை கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4