யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது

Kanimoli
3 years ago
  யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது

 யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் போதை மாத்திரைகளுடன் மூவர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேக நபர்கள் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து 296 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மூவரையும் மேலதிக நடவடிக்கைக்காக , இராணுவ புலனாய்வு பிரிவினரால் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேகநபர்கள் போதைப்பொருள் விற்பனை முகவர்கள் என தாம் சந்தேகிக்கப்பதாகவும், மூவரிடமும் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4