எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் சற்றுமுன் அறிவிப்பு

Kanimoli
3 years ago
எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் சற்றுமுன் அறிவிப்பு

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் சற்றுமுன் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. 

இந்த விடயத்தை டுவிட்டர் பதிவில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். 

அதன்படி ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டரொன்றின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 370 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 415 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பானது இன்று இரவு 9 மணி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை ஏனைய எரிபொருட்களின் விலைகள் அதேவகையில் பேணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4