வடக்கு, கிழக்கின் குடிப்பரம்பலை முழுமையாக மாற்றியமைப்பதற்கான நிகழ்ச்சி நிரலினை முன்னெடுக்க முடிவு
Kanimoli
2 years ago

வடக்கு, கிழக்கின் குடிப்பரம்பலை முழுமையாக மாற்றியமைப்பதற்கான நீண்ட கால நிகழ்ச்சி நிரலினை முன்னெடுப்பதற்கான சூழமைவுகள் தற்போது அடுத்தடு்த்து முன்னெடுக்கப்படுவதாக இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜயதிலக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் அரசியல் கட்சிகள் அவசரமாக அனைத்துக் கட்சிக்கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து நிலைமைகளை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
குடிப்பரம்பலை மாற்றியமைப்பதற்கான இலக்கினை நிறைவேற்றுவதற்கு தடையாக இந்தியா இருந்து விடக்கூடாது என்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க திருகோணமலை அபிவிருத்தி திட்டத்தில் அந்நாட்டைப் பங்காளியாக இணைத்து கையூட்டு வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.



