கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பேருந்து விபத்து: 47 பேர் காயம்

Prathees
3 years ago
கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பேருந்து விபத்து:  47 பேர் காயம்

கிளிநொச்சியிலிருந்து முகமாலை நோக்கி சென்று கொண்டிருந்த மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவினரை ஏற்றி பயணித்த பேருந்துடன்இ பின்னால் பயணித்த டிப்பர் வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் 47 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை  கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஏ9 வீதியில் பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்து திரும்ப முற்பட்ட வேளையே விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு பின் கிளிநொச்சி வைத்தியசாலையில் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், யாழ். போதனா வைத்தியசாலையில் 10 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏனையோர் பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிகவிசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4