அமைச்சுக்களின் கீழ் சில நிறுவங்கள் இணைப்பு – வர்த்தமானி அறிவிப்பு

Mayoorikka
3 years ago
அமைச்சுக்களின் கீழ் சில நிறுவங்கள் இணைப்பு – வர்த்தமானி அறிவிப்பு

சுகாதாரம், ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் மின்சாரம், எரிசக்தி ஆகிய இராஜாங்க அமைச்சுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ள நிறுவங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தனியார் மருத்துவ ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, 1990 சுவாசார்யா அறக்கட்டளை, தேசிய புகையிலை மற்றும் மதுபான அதிகாரசபை ஆகியவை சுகாதார அமைச்சின் கீழ் நியமிக்கப்பட்டுள்ளன.


மேலும், அரச சுகாதார அமைச்சின் கீழ் உள்ள ஆயுர்வேத திணைக்களம், ஆயுர்வேத வைத்திய சபை, இலங்கை ஆயுர்வேத மருந்துகள் கூட்டுத்தாபனம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான விடயதானங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தபால் திணைக்களம், அரச அச்சக திணைக்களம் மற்றும் இலங்கை அச்சக நிறுவனம் என்பன ஊடக அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

மேலும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் கீழ், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை பெற்றோலிய மொத்த விற்பனை முனைய நிறுவனம், திருகோணமலை பெற்றோலிய முனைய நிறுவனம், இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் எல்லைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4