அனைத்துக் கட்சிகளும் எவ்வித பேதமின்றி இணைந்து போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்பட வேண்டும் - எம்.கே சிவாஜிலிங்கம்

Kanimoli
3 years ago
அனைத்துக் கட்சிகளும் எவ்வித பேதமின்றி இணைந்து போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்பட வேண்டும்  - எம்.கே சிவாஜிலிங்கம்

அனைத்துக் கட்சிகளும் எவ்வித பேதமின்றி இணைந்து போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.


போதைவஸ்து பாவனை மற்றும் திருட்டு சம்பவங்கள் என்பன தற்போது அதிகரித்து காணப்படுகின்றது.

அனைத்துக் கட்சிகளும் எவ்வித பேதமின்றி இணைந்து போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்பட வேண்டும். விழிப்புக்குழுக்களை உருவாக்கி செயற்பட வேண்டும்.

காவல்துறை மற்றும் படையினர் அதிகமாக இருந்தும் போதைப்பொருள் பாவனையை தடுக்க முடியாதுள்ளது.

எங்களை சீரழிக்க சிங்கள பேரினவாதம் முயற்சிக்கிறது. இதனை அனைவரும் இணைந்து முறியடிக்க வேண்டும்” என்றார்.


மேலும் சீனாவின் இலங்கை நகர்வு தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், “எங்களை சீனா பகடைக்காயாக்க முயற்சிக்க கூடாது. குழம்பிய குட்டையில் சீனா மீன்பிடிக்ககூடாது.

சீனத் தூதரகத்திடம் பெற்ற உதவி தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரின் கருத்து வேடிக்கையானது” என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4