பாரண்டா தோட்டங்களில் வாழும் தொழிலாளர்கள் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபடுள்ளனர்.

Kanimoli
3 years ago
பாரண்டா தோட்டங்களில் வாழும் தொழிலாளர்கள் இன்றைய தினம்  போராட்டத்தில் ஈடுபடுள்ளனர்.

நாவலப்பிட்டி - போஹில், பாரண்டா தோட்டங்களில் வாழும் தொழிலாளர்கள் இன்றைய தினம் (14.10.2022) போராட்டத்தில் ஈடுபடுள்ளனர்.

தமது தோட்டப்பகுதியில் உள்ள நூறு ஏக்கர் காணி தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இ.தொ.காவின் உப தலைவர் பாரத் அருள்சாமியும் தொழிலாளர்களுடன் இணைந்து போராட்டத்தில் பங்கேற்றிருந்தார்.

இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில், “நாம் நீதிமன்ற தீர்ப்பை மதிப்போம். அதற்கு கட்டுப்படுவோம். 100 ஏக்கர் காணி தனியாருக்கு வழங்கப்பட்டால், அத்தோட்டங்களில் வாழும் மக்களுக்கான இருப்பிடம், பாடசாலை, சிறுவர் பராமரிப்பு நிலையம், கடைகள், வணகஸ்தலங்கள் என்பவற்றுக்கு என்ன நடக்கும்?

அடிப்படை உரிமைமீறல் வழக்கு தாக்கல் செய்ய தயார்
இவை தொடர்பில் இன்னும் உரிய பதில் வழங்கப்படவில்லை. 2005ம் ஆண்டிலிருந்து இந்த பிரச்சினை ஒரு தொடர் கதையாகவே இருந்து வந்துள்ளது. இது தொடர்பில் எமது பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.

சிலவேளை, தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் 250 குடும்பங்களின் சார்பிலும் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் வழக்கு தாக்கல் செய்வதற்கும் இ.தொ.கா தயாராகவே உள்ளது” என கூறியுள்ளார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4