சந்தையில் சடுதியாக குறைவடைந்துள்ள கோதுமை மாவின் விலை!

Mayoorikka
3 years ago
சந்தையில் சடுதியாக குறைவடைந்துள்ள கோதுமை மாவின் விலை!

சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஒரு கிலோகிராம் கோதுமை மா 300 ரூபா முதல் 400 ரூபா வரையில் விற்பனையானது. எனினும், தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 25 கிலோகிராம் நிறையுடைய கோதுமை மா மூடை ஒன்றின் விலை 7,250 ரூபாவாகும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கோதுமை மா இறக்குமதி செய்யப்பட்டுள்ளதன் காரணமாக, இவ்வாறு விலை குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4