இன்றைய வேத வசனம் 13.10.2022: கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்

Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 13.10.2022: கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்

தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. (எபிரேயர் 4:12)

பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் என்ன வித்தியாசம்?

பழைய ஏற்பாடு கிரியைகளை சார்ந்தது! புதிய ஏற்பாடு நினைவுகளையும், யோசனைகளையும் சார்ந்தது.
பழைய ஏற்பாட்டில் செய்தால் தான் பாவம். ஆனால், புதிய ஏற்பாட்டில் இயேசு சொல்கிறார் ஒரு ஸ்திரியை இச்சையோடு நினைத்தாலே பாவம்.

அப்படியானால் இருதயத்தின் நினைவுகளும் யோசனைகளும் தான் முக்கியம்.
இன்று அநேகர் கேட்பார்கள் பச்சை குத்துவது தவறா? காது குத்தி கொள்வது தவறா? அண்டர்வேர் தெரியும்படி பேண்ட் அணிந்து கொள்வது தவறா? குடிப்பது தவறா?

சினிமா பாடல்களுக்கு இசைவாசித்து விட்டு சபையிலும் வந்து இசை வாசிப்பது தவறா?
சினிமா தியேட்டரில் சென்று படம் பார்த்துவிட்டு சினிமா பாடல்களை பாடுவது தவறா? என்றெல்லாம் கேட்பார்கள்!

நாம் இதெல்லாம் தவறு என்று சொன்னால், வேதாகமத்தில் எங்கே சொல்லி இருக்கிறது என்று கேட்பார்கள்.

நாமும் வேதாகமத்தில் எழுதி இருப்பதை எடுத்து காண்பித்தாலும், இது அந்த காலகட்டத்தில் எழுதப்பட்டது, இந்த காலத்தில் எழுதப்பட்டது என்று வியாக்கியானம் செய்வார்கள்.

நாம் அவ்வளவு எல்லாம் வியாக்கியானம் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், புதிய ஏற்பாடு மிகவும் எளிமையாய் இருக்கிறது! நீங்களே புரிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு எளிமையாக சொல்ல வேண்டுமானால், நீங்கள் எந்த ஒரு காரியமும் செய்தாலும், அந்தக் காரியத்திற்கு பின்பாக இருக்கிற நோக்கம் மிகவும் முக்கியம்.

நீங்கள் பச்சை குத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால் தாராளமாக குத்துங்கள். ஆனால், எதற்காக நீங்கள் அதை குத்துகிறீர்கள் என்று சொல்ல வேண்டும்.

நீங்கள் காது குத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா? குத்திக் கொள்ளுங்கள். ஆனால், அது எதற்காக குத்துகிறீர்கள் என்று நீங்கள் சொல்ல வேண்டும்.

நீங்கள் சினிமா அல்லது மதுபானம் வேண்டும் என்று நினைக்கிறீர்களா? ஆனால், அதை எதற்கு பார்க்கிறீர்கள், எதற்கு குடிக்கிறீர்கள் என்று நீங்கள் சொல்ல வேண்டும்.

நீங்கள் இதை அனைத்தையும் செய்வதற்கு சுயம் தான் காரணம், சுய இச்சை தான் காரணம் என்று நீங்கள் சொல்வீர்களானால், இது வேதத்தில் எழுதப்பட்டிருந்தாலும் எழுதப்படாவிட்டாலும் தவறுதான்.
நீங்கள் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.
(1 கொரிந்தியர் 10:31) என்று வேதாகமம் சொல்கிறது.

நாம் ஒரு காரியத்தை செய்து முடித்துவிட்டு தேவனுக்கு மகிமை செலுத்த வேண்டும்.
ஆனால் நாம் குடித்துவிட்டு இயேசுவே எனக்கு நல்ல போதை தந்திர் உமக்கு மகிமை என்று சொல்ல முடியுமா?

ஒரு சினிமாவை பார்த்துவிட்டு இன்று என் கண்களுக்கு நல்ல இச்சை விருந்தை தந்திர் உமக்கு மகிமை என்று சொல்ல முடியுமா?

மேடை ஏறி சினிமா பாடலை பாடி பாடிவிட்டு, ஆண்டவரே வாக்கிரகமான பாடல் வரிகளை இந்த ஜனங்களுக்கு பாட கிருபை செய்திரே உமக்கு மகிமை என்று சொல்ல முடியுமா? முடியாது.
எனவே தான், பிசாசு அப்படி சொல்லுகிற கடின இருதயமுள்ள மனிதர்களை நம் முன்னால் எழுப்பி வைத்திருக்கிறான்.

அவர்கள் கிறிஸ்தவ மேடை ஏறி கஷ்டப்பட்டு, இந்த படத்தை எடுத்திருக்கிறேன். கஷ்டப்பட்டு இந்த வக்கிரகமான பாடல் வரிகளை எழுதி இருக்கிறேன். கஷ்டப்பட்டு இந்த சினிமா பாடலுக்கு இசையமைத்திருக்கிறேன்.

இன்று இந்த சினிமா மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. இது எல்லாம் ஆண்டவரின் கிருபை என்பதாக அந்த நபர் பேசிவிட்டால், சினிமா புனிதமாகிவிடுமா?

ஒரு விஷயத்தை மனதில் கொள்ளுங்கள், நாம் எதை செய்தாலும் தேவனுக்கு மகிமை செலுத்த வேண்டும்.
நாம் ஒரு காரியத்தை செய்து முடித்த பிறகு எந்த ஒரு குற்ற உணர்வும் இன்றி தேவனுக்கு மகிமை செலுத்த முடிந்தால் அந்த காரியம் தேவனுக்கு மகிமை சேர்க்கும் காரியம் என்று அர்த்தம்.

நீங்கள் எந்த காரியத்தை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், இருதயத்தின் நினைவுகளையும், யோசனைகளையும் தேனுடைய வார்த்தை வகையறுக்கறது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். ஆமென்!

கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். (#கலாத்தியர் 5:24)