12 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

Kanimoli
3 years ago
12 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

இலங்கையை அண்மித்துள்ள வளிமண்டல தாழ்வு நிலை காரணமாக 24 மணித்தியாலங்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய,12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேல், வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழையை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஏனைய பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழையை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் இன்று(12.10.2022) காலை 8:30 மணி முதல் அதிகளவான மழை வீழ்ச்சி( 103.0 மி.மீ.) அவிசாவளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

பாதுக்காவில் 83.0 மி.மீ மழை வீழ்ச்சியும், கேகாலை மாவட்டத்தின் வரகாபொலவில் 60.5 மி.மீ மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.   

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4