கட்டிடப் பொருட்கள் வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழப்பு

Prasu
3 years ago
கட்டிடப் பொருட்கள் வர்த்தக நிலையத்தில்  ஏற்பட்ட தீ விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழப்பு

மிரிஹான எந்திரேகோட்டே சந்தியில் உள்ள கட்டிடப் பொருட்கள் வர்த்தக நிலையத்தில் இன்று (11) காலை ஏற்பட்ட தீ விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லக்ஷ்மன் சரத் குமார் என்ற 63 வயதுடைய நபரே தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

தீ விபத்தின் போது, ​​குறித்த நபர் கடை மாடியில் உறங்கிக் கொண்டிருந்ததாகவும், தீயினால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அப்பகுதியில் உள்ள கடைகளில் கூலித் தொழிலாளி என்றும், உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் கடைக்காரர் அவருக்கு தங்கும் வசதி செய்து கொடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணம் உறுதியாக தெரியவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.

தீயினால் கடைக்கு ஏற்பட்ட நஷ்டம் இதுவரை மதிப்பிடப்படாத நிலையில், கடை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

கோட்டே மாநகர சபையின் தீயணைப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.

மின்சார சபை அதிகாரிகளும் மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன் நுகேகொட குற்றப் புலனாய்வு ஆய்வு கூட அதிகாரிகள் உரிய இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்வதுடன் நீதவான் விசாரணையும் நடத்தப்படவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4