வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து காணாமல் போன கைதி கொழும்பு விளக்கமறியல் சிறையில் கண்டுபிடிக்கப்பட்டார்

Prathees
3 years ago
வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து காணாமல் போன கைதி கொழும்பு விளக்கமறியல் சிறையில் கண்டுபிடிக்கப்பட்டார்

கடந்த மாதம் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து காணாமல் போன கைதி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்

மற்றுமொரு குற்றச்சாட்டில் கொழும்பு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்

சந்தேக நபர் செப்டெம்பர் 16ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அன்றைய தினம் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றதாகவும் சிறைச்சாலைப் பேச்சாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்தார்.

காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் காணாமல் போன மேற்படி கைதியை சந்தேக நபராக கொழும்பு விளக்கமறியலில் வைக்க கடுவலை நீதவான் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 30ஆம் திகதி உத்தரவிட்டது.

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து காணாமல் போன கைதி என அடையாளம் காணப்பட்ட சந்தேகநபரிடம் சிறைச்சாலை அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

அதன்படி, சிறை சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றதாக அவர் தெரிவித்தார்.

காவலில் வைக்கப்பட்ட முதல் நாளிலேயே எந்த முயற்சியும் இன்றி அதிநவீன முறையில் எப்படி தப்பிச் சென்றார் என்பதை அதிகாரிகளிடம் அவர் வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

தப்பியோடிய கைதி தென்னை மரங்களில் ஏறுவதிலும் நடனக் குழுவில் நடனமாடுவதிலும் வல்லவர் என விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

தப்பியோடிய கைதி தொடர்பான குற்றச்சாட்டுகள் சிறைச்சாலை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பேச்சாளர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4