பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்:

Mayoorikka
3 years ago
பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்:

காலி முகத்திடல் மைதானத்தில் திங்கட்கிழமை  நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக உத்தரவு பிறப்பிக்குமாறு இலங்கை பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கோட்டை நீதவான் திலின கமகே நிராகரித்துள்ளார்.

சட்டத்தரணிகள் மற்றும் தொழில் உரிமைகள் இயக்கம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், அமைதியான முறையில் ஒன்றுகூடுவது அடிப்படை உரிமை என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கு முன்னரும் பல அரசியல் கட்சிகள் காலி முகத்திடலில் போராட்டங்களை நடத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சமர்ப்பிப்புகளை பரிசீலித்த கோட்டை நீதவான் திலின கமகே, ஆர்ப்பாட்டத்தில் சட்டவிரோதமான அல்லது வன்முறையான எதுவும் இடம்பெறும் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என குறிப்பிட்டார்.

மற்றவர்களின் உரிமைகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் எந்தவொரு போராட்டத்திற்கும் இடையூறுகள் இல்லை என்று குறிப்பிட்ட நீதவான், வன்முறைச் செயல்கள் இடம்பெற்றால், அவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4