உழவு இயந்திரம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி இன்னுமொருவர் படுகாயம்

Kanimoli
3 years ago
உழவு இயந்திரம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி  இன்னுமொருவர் படுகாயம்

திருகோணமலை மாவட்டம், சம்பூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிப்பகுதியில் உழவு இயந்திரம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இன்னுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது என்று சம்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

சம்பூர் – கடற்கரைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிறிபால கஜன் (வயது 32) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

வயல் உழவு வேலை செய்வதற்காகச் சாரதியும், உதவியாளரும் உழவு இயந்திரத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது உழவு இயந்திரமானது வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததாலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதேவேளை, உயிரிழந்தவரின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த நபர் அதே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என்று சம்பூர் காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4