பழங்குடியினர் தேன் சேகரிப்பதற்கான அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை

Mayoorikka
3 years ago
பழங்குடியினர் தேன் சேகரிப்பதற்கான அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை

கிழக்கு மாகாண கரையோரபகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர், வனப்பகுதிகளில் தேன் சேகரிப்பதற்கான அடையாள அட்டையை வழங்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

மூதூர் பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியினர் வசித்து வருகின்றனர்.

மீன்பிடி அவர்களது பிரதான தொழிலாக இருந்தாலும் கூட நாட்டின் தற்போதைய நிலை, மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக அவர்கள் தங்களது தொழிலை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக அவர்கள் தேன் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போதும், அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்தாக குவேனி பழங்குடி நலன்புரி அமைப்பின் தவிசாளரும் மூதூர் பழங்குடியினர் சங்கத் தலைவருமான கே.கனகரத்னம் தெரிவித்துள்ளார்.

தாங்கள் முகங்கொடுக்கும் பிரச்சினை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு தெளிவுப்படுத்தப்பட்டது.

அதற்கமைய அந்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் அந்த பிரதேசத்திற்கு பிரவேசித்து தேன் எடுப்பவர்களுக்காக அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4