கை, கால்கள் கட்டப்பட்டு சாக்கு மூட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட 4 வயது சிறுவன்

Prathees
3 years ago
கை, கால்கள் கட்டப்பட்டு சாக்கு மூட்டையில்  கண்டுபிடிக்கப்பட்ட  4 வயது சிறுவன்

ஆனமடுவ திபுல்வெவ பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த போது காணாமல் போன 4 வயது சிறுவன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் நேற்று மாலை சாக்கு மூட்டையில் தென்னந்தோப்பில் விடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர். 

 குழந்தை ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குழந்தை அதிர்ச்சியில் காணப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குழந்தை அழுது கொண்டிருந்த இடத்துக்கு அருகில் சாண மூட்டை ஒன்றும், குழந்தையின் கைகால்களை கட்டப் பயன்படுத்தியதாகக் கருதப்படும் கயிறு ஒன்றும் இருந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

குழந்தை காணாமல் போனதை அறிந்த தாய் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் அளித்து அவர்களின் உதவியுடன் குழந்தையை கண்டுபிடித்துள்ளார். குழந்தை அழுது கொண்டிருந்ததை கண்டு பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் தற்போதைய உடல்நிலை தேறிய பிறகு என்ன நடந்தது என்பது குறித்து வாக்குமூலம் எடுப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4