தன்னை பார்த்ததற்காக வீதியில் சென்ற 14 வயது சிறுவன் மீது 20 வயது இளைஞன் கத்திகுத்து தாக்குதல்

Prasu
3 years ago
தன்னை பார்த்ததற்காக வீதியில் சென்ற 14 வயது சிறுவன் மீது 20 வயது இளைஞன் கத்திகுத்து தாக்குதல்

என்னை என்னடா பார்க்கின்றாய்´ என வீதியில் சென்ற 14 வயது சிறுவன் மீது வீதியில் நின்ற 20 இளைஞன ஒருவர் கத்தியால் குதியதை அடுத்து சிறுவன் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் கத்திகுத்து தாக்குதலை நடாத்தியவரை கைது செய்துள்ள சம்பவம் காத்தான்குடி கர்ப்பலா பிரதேசத்தில் நேற்று (07) மாலை 6 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரசேத்தில் வீதியில் சம்பவதினம் மாலை சிறுவன் வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தான் இதன் போது அங்கு வீதியில் நின்ற ஒருவன் சிறுவனை பார்த்து என்னடா என்னை பார்க்கின்றாய் என கேட்டு கொண்டு சிறுவன் மீது கத்திகுத்து தாக்குதலை மேற்கொண்டார்.

இதனை அடுத்து சிறுவன் கத்தியதை அடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக படுகாயமடைந்த சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்ததுடன் கத்திகுத்து தாக்குதலை நடாத்திய இளைஞனை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததை அடுத்து அவனை பொலிஸார் கைது செய்ததுடன் இவர் போதைபொருள் பாவிப்பதாகவும் இதனால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4