பெரிய குழம்பு பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்த சிறைக் கைதி

Prathees
3 years ago
பெரிய குழம்பு பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்த சிறைக் கைதி

அகுனகொலபலஸ்ஸ சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர் சமயலறையில் இருந்த பெரிய குழம்பு பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கைதி கொலைக்குற்றம் சாட்டப்பட்டு 25 ஆண்டுகள் சிறைத்தண்டயை பெற்றுள்ள அவர் 2028ல் விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 26ஆம் திகதி பிற்பகல் அகுனகொலபலஸ்ஸ சிறைச்சாலையின் சமையலறையில் உணவு சமைத்துக்கொண்டிருக்கும்போது குறித்த  கைதி மற்றொரு நபருடன் சேர்ந்து சோறு சமைக்கும் பெரிய கடாயை  எடுத்துச் சென்றபோதுஇ ​​அவர் வழுக்கி அருகில் இருந்த குழம்பு பாத்திரத்தில் விழுந்துள்ளார்.

அப்போது, ​​ பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான கைதி தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சை பெற்று வந்த கைதி 10 நாட்களுக்கு பிறகு கடந்த 6ம் திகதி உயிரிழந்தார்.

இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக சிறைச்சாலை தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

 இந்த கைதி வழுக்கி குழம்பு சட்டியில் விழுந்து தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

விபத்து காரணமாக மரணம் ஏற்பட்டதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4