யாழ்.கொக்குவில் பகுதியில் ஆட்டோ சாரதி மீது வாள்வெட்டு

Kanimoli
3 years ago
 யாழ்.கொக்குவில் பகுதியில் ஆட்டோ சாரதி மீது வாள்வெட்டு

   யாழ்.கொக்குவில் பகுதியில் ஆட்டோ சாரதி மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் படுகாயமடைந்த சாரதி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் அச்சுவேலி பகுதியை சேர்ந்த செ. ரதீஸ்குமார் (வயது 41) என்பவரே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்றைய தினம் வியாழக்கிழமை (06) இரவு கொக்குவில் பகுதியில் இருந்து அச்சுவேலியில் உள்ள தனது வீடு நோக்கி முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 06 பேர் கொண்ட வன்முறை கும்பல் அவரை வழிமறித்து வாளினால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4