தண்ணீர் கேட்ட சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இராணுவ சிப்பாய் உட்பட மூவரை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகள்

Prathees
3 years ago
தண்ணீர் கேட்ட சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இராணுவ சிப்பாய் உட்பட மூவரை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகள்

பாடசாலை மாணவியை பல சந்தர்ப்பங்களில் வன்புணர்வு செய்த இராணுவ சிப்பாய் உட்பட மூவரை கைது செய்யுமாறு கடந்த 4ஆம் திகதி கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலதிக  வகுப்பில் கலந்து கொள்வதற்காக சென்ற சிறுமி  சந்தேக நபரான இராணுவ வீரரின் வீட்டிற்குச் சென்றுகுடிப்பதற்கு  தண்ணீர் கொடுக்குமாறு  கூறிய போது, ​​இராணுவ வீரர் துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமியின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர், அதே பகுதியில் வசிக்கும் 28 மற்றும் 18 வயதுடைய இரண்டு இளைஞர்களும் பல சந்தர்ப்பங்களில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மேலும் இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக சந்தேக நபர் ஒருவர் பணம் கொடுத்து மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4