எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
Kanimoli
2 years ago

வவுனியா ஹோரவப்போத்தானை வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரேன மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த வேளையில் திடீரேன எரிபொருள் தாங்கியிலிருந்து தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனை அவதானித்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் உடனடியாக செயற்பட்டு தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமையுடன் பாரிய அனர்த்தத்தினை தவிர்த்துள்ளனர்.
குறித்த அனர்த்தம் வாகனத்தின் மின் ஒழுக்கு அல்லது வாகனம் இயங்கு நிலையில் வைத்திருந்தமையினால் இடம்பெற்று இருக்கலாம் சந்தேகிக்கப்படுகின்றது.



